பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் 8.30 வரையிலும்,
காலை 11 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் இந்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி மற்றும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி ஆகிய வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.