சிபெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிறுவனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி,
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.