crossorigin="anonymous">
உள்நாடுபொது

சேதன பசளையினால் நட்டமடையும் விவசாயிகளுக்கு நடடயீடு – அமைச்சர் மகிந்தானந்த

விவசாயிகளுக்கும் இலவச சேதனப் பசளை வழங்கப்படுவதுடன் அந்த சேதன பசளை விவசாயிகளுக்கு போதிய அறுவடையை வழங்காவிட்டால் அதற்குரிய நஸ்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று (26) மட்டக்களப்பில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை நேற்று சனிக்கிழமை (26) ஆரம்பித்து வைத்தனர்.

கடந்த அரசாங்கத்தினால் ஒரு கிலோ நெல் 30 ரூபாவுக்கு வாங்கப்பட்ட நிலையில் இன்று அரசாங்கம் 56 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்ணய விலைக்கு நெல்கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இவ்வருடத்தின் சிறுபோகத்தில் விளைந்து உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56 ரூபாய் 50 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர், அமைச்சின் செயலாளர்கள் போன்றோர் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 6

Back to top button
error: