இலங்கையில் இந்தியாவின் (UPI) Unified Payments Interface எனும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று (12) முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் இதன்முலம் மேம்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.