
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (26) தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது