crossorigin="anonymous">
உள்நாடுபொது

மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவை தீர்மானம் இரத்து

கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள இல்லம் பறிபோகிறது

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை,மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்த ஏதுவாக அப்போதைய அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை இரத்து செய்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரியந்த ஜயவர்தன, காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் நேற்று (29) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி, குறித்த அமைச்சரவை தீர்மானமானது பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் பங்கேற்றிருந்த போதே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது இயற்கை நியதிகளுக்கு எதிரான செயற்பாடு எனவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளுக்கமைய தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 87 = 89

Back to top button
error: