crossorigin="anonymous">
பிராந்தியம்

கிண்ணியா பிரதேச செயலக பிரில் போதை ஒழிப்பு நடைபவனி

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி நேற்று (02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

ஒரே கிராமம் ஒரே நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற செயல் திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி இடம்பெற்றது.

இதன்போது வைத்தியர் எம்.ஏ சமீம், நோவா விளையாட்டு கழகம் மற்றும் ஏனைய விளையாட்டு கழக வீரர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: