crossorigin="anonymous">
பிராந்தியம்
Trending

“சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் மூதூரில் நடந்த வீதியோர நாடகம்

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனவெட்டை எனும் கிராமத்தில் செடார் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஓர் கட்ட நிகழ்வாக “சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் வீதியோர நாடகம் மூதூர் சேனையூர் மத்திய கல்லூரி மாணவர்களால் நேற்றைய தினம் (08) சனிக்கிழமையன்று சந்தனவெட்டை கிராம பிரதான வீதியில் நடைபெற்றது.

இவ்விதியோர நாடகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனும், பிரிட்டிஷ் கவுன்சிலின் அனுசரனையுடனும் முஸ்லிம் எயிட்ன் வழிகாட்டலுடன் மூதூர் நல்லிணக்கத்திற்கான இளைஞர் குரல் எனும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் மூன்று சமூகங்களில் காணப்படும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு அவற்றினூடாக எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான ஒரு நாடகமாகவே இடம்பெற்றது. அது மட்டுமன்றி விஷேட தேவையுடையேர்களை எவ்வாறு கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது தொடர்பாகவும், நேற்றைய தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை கௌரவிக்கும் முகமாகவும் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்நிகழ்வில் முஸ்லிம் எயிட்டின் திருகோணமலை மாவாட்ட ஒருங்கிணைப்பாளரான சலீம், முஸ்லிம் எயிட்டின் திட்ட முகாமையாளர் அருண், செடார் ஆக்டிவ் சிட்டிசன் வழிகாட்டி மதுஷாலினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 4 =

Back to top button
error: