நிகவெவ முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் திறந்து வைப்பு
அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்’ என்ற கருப் பொருளின் அடிப்படையில் நிகவெவ கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நிகவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் திறப்பு விழா நேற்றுமுன்தினம் (07) பாடசாலை அதிபர் ஏ.ஜெ/எம்/ தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெபிதிகொள்ளாவ வலயக் கல்விப் பணிப்பாளர் ருவன் மைதிரிபால அவர்கள் கலந்து சிறப்பித்தார்
வலயக் கல்விப் பனிமனையின் தமிழ் பிரிவு பணிப்பாளர் எஸ். மொஹமட், மற்றும் ஏனைய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஏ.எம். உவைஸ், அந்நஜாஹ் அகடமியின் தலைவர் எஸ்.எம்.சதாத் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.