முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று (23) முதல் அ நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்த விடயம் தொடர்பில் முப்படைத் தளபதிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
.முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் போதுமான அளவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.