crossorigin="anonymous">
ஆக்கங்கள்

மத்தியஸ்தம் மூலம் சமுதாய அமைதியை நிலைநிறுத்தல்

“முரண்பாடு” என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள், குழுக்கள், அல்லது அமைப்புகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து, நம்பிக்கை, மதிப்பு, ஆதிக்கம் அல்லது ஆதாய வேறுபாடுகளால் உருவாகும் எதிர்மறை உணர்வு மற்றும் மோதலான நிலைமையாகும்.

முரண்பாடுகள் ஒரு சமூக அவசியம் எனக் கருதப்படுகின்றன. சிலர் அவற்றை சமூக மாற்றத்திற்கான தேவையான சக்தியாகப் பார்க்கின்றனர், மற்றவர்கள் தவிர்க்க முடியாத அரசியல் மற்றும் உளவியல் நிகழ்வாகக் கருதுகின்றனர். முரண்பாடுகளைச் சரியான முறையில் கையாளக்கூடியதாக இருந்தால், அது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

இன்றைய சூழலில் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. அதனால் அவற்றை தீர்க்க பல்வேறு முறைகள் பயன்படுகின்றன:

பேச்சுவார்த்தை (Negotiation)
சமரசம் (Compromise)
மத்தியஸ்தம் (Mediation)
வழக்கறிஞர் மத்தியஸ்தம் (Arbitration)
சமாதானம் (Accommodation)
கட்டாய தீர்வு (Forceful Resolution)
ஒதுக்கல் (Avoidance)

இத்தகைய முறைகள் சமூக, அரசியல், தொழில்துறை மற்றும் குடும்ப துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. எந்த தீர்வு முறையை தேர்வு செய்வது என்பது முரண்பாட்டின் தன்மை, அதன் தாக்கம் மற்றும் கலாச்சார, அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மாறுபடும்.

பொதுவாக, முரண்பாடுகளைத் தீர்க்க பொலிஸ், நீதிமன்றம், காளி நீதிமன்றம், மத்தியஸ்த சபை போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால், இத்தகைய அமைப்புகள் மூலம் பெறப்படும் தீர்வுகள் அனைவருக்கும் திருப்திகரமாக அமைகிறதா என்பது ஒரு கேள்வியாகவே தொடர்கிறது.

இந்த நிலையில், மத்தியஸ்தம் (Mediation) என்பது சமூக அமைதிக்குப் பலனளிக்கக்கூடிய, சிறந்த தீர்வு முறையாக கருதப்படுகிறது.

மேலும் இவ்வாறான அமைப்புகளின் மூலமாக முரண்பாட்டு தீர்வு ஒன்று மேற்கொள்ளப்படுகின்ற பொழுது நேர வின்விரயம் செலவு தீர்வு இருதரப்புக்கும் வெற்றி உள்ளதா அல்லது திருப்தி உள்ளதா அல்லது இரு தரப்புகளுக்கும் உடன்பாடு உள்ளதா போன்ற விடயங்கள் பாதகமாக அமைவதனை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் இம் முரண்பாட்டு முறையில் சிறந்ததாக கருதப்படுகின்ற மத்தியஸ்தம் செய்யும் முறையாகும்.

சட்டம் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் சமூகத்தில் எழுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இந்த மத்தியஸ்த வழிமுறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் இதற்காக பயன்படுத்தப்படுகின்ற வழிமுறையாக மாற்று வழியில் பிணக்கு தீர்வு முறை (ADR) வழிமுறையானது பின்பற்றப்பட்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் தீர்வு கிடைக்க மாற்று வழிமுறைகள் (Alternative Dispute Resolution – ADR) பல உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்தியஸ்தம் (Mediation)

மத்தியஸ்தம் என்பது இரு தரப்பினருக்கும் ஏற்றவாறு ஒரு தீர்வை ஏற்படுத்த உதவும் முறையாகும். இதில் மூன்றாம் தரப்பினராக ஒரு நடுநிலை நபர் (மத்தியஸ்தர் – Mediator) இருவரிடமும் பேசி, சமரசம் செய்து, நேரடியாக நீதிமன்ற நடவடிக்கையைத் தவிர்க்க உதவுவார். இவ்வாறு மேற்கொள்வதன் மூலமாக இரண்டு தரப்பினரும் உடன் உடன்பாட்டுக்கு வருவதன் மூலமாக (win win solution) தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மூன்றாம் தரப்பினரான மத்தியஸ்தர் (Mediator) ஒரு சரியான தீர்வு பெறும் வகையில் இரு தரப்பினரிடமும் கலந்துரையாடி சமரசம் செய்ய உதவுவார்.

சட்டத்தால் கட்டாயமாக ஏற்க வேண்டிய நிலை இல்லை, ஆனால் இரு தரப்பும் சமாதானமாக ஒப்புக்கொள்ள முடியும்.

> எடுத்துக்காட்டு:

குடும்ப வழக்குகள் (திருமண விவகாரங்கள், சொத்து பிரச்சனைகள்).

தொழில் தகராறுகள் (ஊழியர்-நிறுவனம் இடையே).

மத்தியஸ்தம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?

1. மத்தியஸ்தரை தேர்வு செய்தல்:
ஒரு நிபுணரான, நடுநிலைமையான நபர் மத்தியஸ்தராக செயல்பட வேண்டும். அவர் பொது நலன் அடிப்படையில், எந்த ஒரு தரப்பிற்கும் சார்பாக இல்லாமல் செயல்பட வேண்டும்.

2. பிரச்சனையை விளக்குதல்:

இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். உண்மையான பிரச்சனை மற்றும் அதன் காரணங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
3. பேச்சுவார்த்தை மற்றும் சர்ச்சை தீர்வு:
மத்தியஸ்தர் முதன்முறையாக இருவருடனும் தனிப்பட்ட முறையில் பேசி கருத்துகளை பெறலாம். பின்னர் இருவரும் இணைந்து பேசியும் சரியான முடிவுக்கு வர முயற்சி செய்யலாம்.

4. தீர்வு கண்டறிதல்:
இருவரும் ஏற்கக்கூடிய ஒரு தீர்வு வகுக்கப்படும். அதை எழுத்துப் பதிவு செய்து, இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

5. முடிவை நிறைவேற்றுதல்:

முடிவை இரு தரப்பும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சரியாக செயல்படுகிறார்களா என்று கண்காணிக்கலாம்.

மத்தியஸ்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

நேரம் மற்றும் செலவு மிச்சம்

நீதிமன்ற வழக்குகளை விட மிகவும் விரைவாகவும் குறைந்த செலவில் முடிக்கலாம்.

நடுநிலை தீர்வு

முறையான தீர்வுகளுடன் இருவரும் சமரசம் செய்ய அதிக வாய்ப்பு இருக்கும்.

உரிமை மற்றும் தனிப்பட்ட தன்மை (Confidentiality)

நீதிமன்ற வழக்குகளால் தனிமனித விபரங்கள் வெளியேறலாம், ஆனால் மத்தியஸ்தம் இரகசியமாகவே தொடரும்.

விரும்பிய முடிவை ஏற்படுத்தும் வசதி

நீதிமன்றம் கட்டாய தீர்வு வழங்கும், ஆனால் மத்தியஸ்தத்தில் இருவரும் சந்தோஷமாக ஏற்கும் முடிவை உருவாக்க முடியும்.

நட்பு மற்றும் வணிக உறவுகளை பாதுகாத்தல்

குடும்ப உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவர்கள் நல்லுறவை கெடாமல் பிரச்சனையை தீர்க்கலாம்.

சமுதாய அமைதிக்கு உதவுதல்

சமூக மற்றும் சமூக-மத பிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்படும்போது சமூக அமைதிக்குத் துணைபுரியும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படுவதன் மூலமாக முரண்பாடுடன் தொடர்புடைய இரண்டு நபர்களுக்குமே அவர்கள் விரும்புகின்ற தேவைகளின் அடிப்படையில் அல்லது அவர்களின் நோக்கங்களின் அடிப்படையில் அவர்களை தீர்வுகளை அவர்களாகவே பேசி தீர்மானிக்கின்ற ஓர் நிலையினை உருவாக்கி அதனை முறையாக ஒழுங்குபடுத்தி மத்தியஸ்தம் செயற்படுகின்ற பொழுது இரு தரப்புகளுக்கும் இடையில் வெற்றி வெற்றி என்று அடிப்படையில் தீர்வு கிடைக்கப் பெறுகின்றது இவ்வாறு கிடைக்கப்பெற தீர்வு மூலமாக அவர்களுக்கிடையிலே நட்புறவு வளர்க்கப்படுவதும் மேலும் இப்ப பிரச்சனை தொடர்பாக மேலும் பல பக்க பிரச்சனைகளை உருவாக்காமல் அல்லது முரண்பாடு தீவிரம் அடையாமல் தடுத்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக இது அமையப்பெறுகின்றது.

எனவேதான் முரண்பாடுகளை தீர்க்கின்ற சமூகத்தில் செயல்படுகின்ற அமைப்புகள் முரண்பாடு ஒன்றினை தீர்க்கின்ற பொழுது win win solution ஏற்படக் கூடிய வகையில் செயல்படும் பொழுது முரண்பாடுகள் மேலும் வலுப்பெறாமல் முடிவதற்கு வாய்ப்பாக அமையும்.

எனவே, சமூக அமைதிக்காகவும், நியாயமான தீர்வுக்காகவும் மத்தியஸ்த முறையை ஊக்குவிப்பது அவசியமாகும்.

MSM SAJEETH – MUTHUR

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 54

Back to top button
error: