மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவை அதிகரிப்பு இதேவேளை ,மகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி வழங்கவிலலை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு காலையில் சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும், மாலையில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களுக்கு சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இன்று முதல் 70 ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை பேணும் வகையில் பயணிகளுக்கு உதவுவது இதன் நோக்கமாகும்.
இந்நிலையில் ,அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட ஆகிய இடங்களில் இருந்தும், கம்பஹாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் 11 ரயில் சேலைகள் இன்று இடம்பெறும்.
கரையோர ரயில் பாதையில் அலுத்கம, களுத்துறை தெற்கு, வாத்துவ, பாணந்துறை, மொரட்டுவ, கல்கிஸ்சை ஆகிய இடங்களிலிருந்து 12 ரயில்; சேவைகள் இடம்பெறும்.
இதேபோன்று, அவிசாவளை- பாதுக்கைக்கும் இடையில் 5 ரயில் சேவைகள் இடம்பெறும். புத்தளம் ரயில் பாதையில் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்புக்கும் இடையில் 8 ரயில் சேவைகள் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது