crossorigin="anonymous">
உள்நாடுபொது

10 லட்சம் மொடனா, 20 ஆயிரம் பைசர் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது – அமைச்சர் 

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக மொடனா மற்றும் பைசர் தடுப்பூசிகளை வழங்க தொற்று நோயியல் தொடர்பான தேசிய ஆலோசனை குழு அனுமதி அளித்துள்ளதாக மருந்து ஒழுங்குறுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதற்கமைவாக அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 10 லட்சம் மொடனா தடுப்பூசிகளும், 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

செப்டம்பர் மாதம் அளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 130 லட்சம் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான 210 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 7

Back to top button
error: