உள்நாடுபிராந்தியம்
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி

மேல் மாகாணத்தில் இன்று (30) முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இதன் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சயனோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.