crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸ் நிலையங்களுக்கு 2000 முச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

‘குடிமக்களுக்கான காவற் துறை’ என்ற எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் குடியியல் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை இலங்கை பொலிஸ் நிலையங்களுக்கு வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்திற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வலுவான போக்குவரத்து அமைப்பு காணப்பட வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

முச்சக்கர வண்டிகளை, மேற்படி பொலிஸ் நிலையங்களின் – குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை, பல்வேறு முறைபாடுகளை விசாரித்தல், 119 அவசர அழைப்புகளுக்காக ஈடுபடுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தல் மேலும், உளவுத்துறை பணிகள் மற்றும் குடியியல் கடமைகளுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

வரிக் கட்டணமின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த முச்சக்கர வண்டிகளுக்காக அரசாங்கம் 829 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.

நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி சரத் வீரசேகர, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வன சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி..ரத்நாயக்க, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 − 67 =

Back to top button
error: