வெளிநாடு
ஐக். அரபு இராச்சியம் நாட்டு மக்களுக்கு இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயண தடை
ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அந்நாட்டு மக்களுக்கு இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், வியட்நாம், நமீபியா, சம்பியா, கொங்கோ, உகண்டா, சிரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய 14 நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளுக்கான விமான சேவைகளும் ஜூலை 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 புதிய திரிபுகளின் பரவலின் அடிப்படையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.