உள்நாடுபிராந்தியம்
முல்லைத்தீவில் விரைவில் சோலை வரி அறவிடப்படும் – பிரதேச சபை தவிசாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் இந்த மாத நடுப்பகுதியிலிருந்து சோலை வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
“குறிப்பாக இம்மாத முற்பகுதியில் விலை மதிப்புத் திணைக்களத்தால் இது தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சோலை வரி அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.
மேலும் இவ்வாறு சோலை வரி அறவிடுவதால் கிடைக்கும் வருமானத்தினூடாக கரைதுறைப்பற்று பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்” எனவும் அவர் கூறினார்.