crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழில் அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பாவிபோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் அரச அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

யாழ் மாவட்ட வியாபாரிகளினால் தற்போதுள்ள கொரோனா இடர் கால சூழ்நிலையில் வியாபார நடவடிக்கைக்கு பயன்படுத்தும் நிறுக்கும் அளக்கும் கருவிகள் தொடர்ந்தும் யாழ் மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்போது சில வியாபாரிகள் அரச அங்கீகாரமற்ற நிறுக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அரச அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பாவிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படவுள்ளது .

அரச அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பயன்படுத்தும் வியாபாரிகள் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன் அரச அங்கீகாரமுள்ள நிறுத்தல் கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

சட்டத்திற்கு முரணான வகையில் அரச அங்கீகாரமற்ற நிறுத்தல் கருவிகளை பாவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 + = 15

Back to top button
error: