வேலணை பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கியா வாழ்வாதார உதவிகள்
வேலணை மக்களுக்கு சௌபாக்கியா வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
நாடளாவிய சௌபாக்கியா வார செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள நேற்று (02) கையளிக்கப்பட்டன.
வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய கருவிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கான சமுர்த்தி “சிப்தொர” புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், வேலணை பிரதேச செயலாளர், சமுர்த்தி திட்ட அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பயனாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாடளாவிய ரீதியில் ஜூலை 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அமைச்சினால் சௌபாக்கிய வார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.