சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேர் உட்பட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவை தேவையின் அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பத்திநாயக்க, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் விஜயசேன ஆகிய 8 அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது