திருகோணமலை யான் ஓயா அபிவிருத்தி திட்டத்தில் காணி இழந்தவர்களுக்கு நட்டஈடு
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (03) கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 36 நபர்களுக்காக 40 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டஈடு வழங்கிவைக்கப்பட்டன
மொத்தமாக 105 பேருக்கான, 96 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டஈடு வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் சுகாதார நடைமுறைகளை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட சிலரை வரவழைத்து இந்நட்டஈடுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோன், கோமரங்கடவெல பிரதேசசபை தவிசாளர் சந்தன விஜித குமார, அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.