விகாரமடைந்த டெல்ற்றா (Delta Variant) 96 நாடுகளில் கண்டுபிடிப்பு
உலக சுகாதார அமைப்பால் ஆனி மாதம் 29ம் திகதி வெளியிடப்பட்ட கொவிட் -19 சமீபத்திய நிலைமை அறிக்கையின் படி விகாரமடைந்த டெல்ற்றா 96 நாடுகளில் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
சில நாடுகளில் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் இல்லாததால் விகாரமடைந்த வைரஸ்களின் பரவல் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்காமல் போகலாம் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
விகாரமடைந்த டெல்ற்றா அறிக்கையிடப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்களில் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விகாரமடைந்த டெல்ற்றா கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில், எட்டு வாரங்களுக்குள் கொவிட்-19இன் முன்னைய விகாரமடைந்த வைரஸ்களை விட டெல்ற்றா முன்னணி வகிக்கின்றது.
உலகெங்கிலும் விகாரமடைந்த டெல்ற்றா பரவலில் ஒற்றுமையை எதிர்பார்க்கலாம். அடுத்த சில மாதங்களுக்குள்,விகாரமடைந்த டெல்ற்றா உலகின் மிகவும் பிரபலமான கொவிட்-19 வைரஸின் திரிபாக மாறும் என்று அறிக்கை மேலும் கணித்துள்ளது.
இலங்கையிலும் விகாரமடைந்த டெல்ற்றா குறைந்த விகிதத்தில் பரவியுள்ளமையை அவதானிக்கலாம்.அறிக்கைகளின் படி, விகாரமடைந்த டெல்ற்றா பற்றிய அச்சந்தருகின்ற உண்மை என்னவென்றால், இது முன்னைய விகாரமடைந்த வைரஸ்களை விட 55% வேகமாக பரவுவதோடு மற்றும் கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் இடத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
இலங்கையர்களாகிய நாங்கள் இந்த சவாலான காலகட்டத்தில் நாடு முழுவதும் பரவும் கொவிட்-19 இன் விகாரமடைந்த வைரஸ் பரவலினை குறைப்பதற்காக சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்ள நீங்கள் தகுதி பெற்றிருந்தால் அதை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம் விகாரமடைந்த டெல்ற்றா பரவலினை குறைக்க முடியும்.
வீட்டிலிருந்து வெளியேறும் போதும் மற்றும் வீட்டிற்கு திரும்பி வரும் போதும் அறிவுறுத்தப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க தவறினால் விகாரமடைந்த வைரஸ் வீட்டிற்குள் உள் நுழையலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விகாரமடைந்த டெல்ற்றா உங்கள் அன்புக்குரியவர்களான பெற்றோர் மற்றும் குழந்தைகளிடத்தில் பரவக்கூடிய ஆபத்து அதிகமாகும். எனவே சுகாதார பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பதனால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொவிட்-19 இலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதை அவசியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.