கண்டி கல்வி வலய ஆங்கில மொழி பிரிவினரால் இணையவழி ஆங்கில மொழி பரீட்சை
இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் சாதக பாதகங்களையும் மதிப்பெண்ணையும் அறிந்து அவர்களுடைய அங்கில அறிவுத் திறனை வளர்ப்பதற்காக கண்டி கல்வி வலயத்தின் ஆங்கில மொழி மூலப் பிரிவினரால் இணையவழி (Online) மூலம் ஆங்கில மொழிப் பாட பரீட்சை நடத்தப்பட்டது.
கண்டி கல்வி வலயத்தில் வருடந்தோறும் சுமார் 7500 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவார்கள், எனினும் ஒன்லைன் மூலம் நடத்தப்பட்ட பரீட்சைக்கு மொத்தமாக 12892 மாணவர்கள் பங்குபற்றினர்.
கண்டி பிராந்தியத்தைச் சேர்ந்த 5918 மாணவர்களும், பிற பிராந்தியங்களைச் சேர்ந்த 6974 மாணவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். மத்திய மாகாணத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பரீட்சைக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
க. பொ. த சாதாரணப் பரீட்சையில் தோற்றுவதற்கான முன்னோடிப் பயிற்சியாகவும் மற்றும் கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியினை ஊக்குவிக்கும் நோக்கிலேயும் இந்த ஒன்லைன் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
மாகாண கல்வி பணிப்பாளர் எம். ஆம். திரு. ஏ பியதாசாவின் ஆலோசனையின்படி, கண்டி கல்வி வலய உதவிப் பணிப்பாளர் விஜேரத்னியின் மேற்பார்வையில், கே.டி. திருமதி. பிரியதர்ஷனி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.