Uncategorizedஉள்நாடுபொது
பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (08) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு பஸில் ராஜபக்ச மீண்டும், நாடாளுமன்றத்தில் சபாபீடத்துக்குள் வருவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
அதேவேளை பசில் ராஜபக்ஷ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் புதிய நிதி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.