மட்டக்களப்பு – பண்டாரியாவெளியில் நெசவு நிலையம் திறப்பு வைபவம்
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற் உட்பட்ட பண்டாரியாவெளி பிரதேச மக்களின் நன்மை கருதி நெசவு கைத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக நெசவு உற்பத்தி நிலையம் திறத்தலும் அது தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்வும் (09) பண்டாரியாவெளி கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் கலந்து கொண்டு நெசவு கைத்தொழில் தொடர்பான விளக்கங்களை வழங்கியதுடன், நெசவு உற்பத்திக்கான உபகரணங்களையும் வழங்கி சேதன பசளை பாவனையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவித்தல் தொடர்பான தெளிவூட்டல்களையும் வழங்கினார்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.தட்சன கௌரி, கிழக்கு மாகாண அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், கிழக்கு மாகாண கைத்தொழில் துறை திணைக்கள பணிப்பாளர், கிழக்கு மாகாண கைத்தொழில் துறை உதவி பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம சேவகர், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், நெசவு தொழிலை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகலென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பண்டாரியாவெளி கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண்களை ஒன்றிணைத்து நெசவு தொழிலினை மேற்கொள்வதற்காக பயிற்றுவித்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், நெசவு தொழிலின் நன்மைகள், பயில வருவோருக்கு நாளாந்த கொடுப்பனவு வழங்கல் போன்ற திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்