இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டிகள் சுகாதார அமைச்சினால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன
திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் மட்டுமே நடத்த முடியும். அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 150 பேருடன் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.