கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது
மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சட்ட விரோத மணல் அகழ்வினால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என தெரிவிக்கும் கிராம மக்கள் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் கனரக வாகனங்களின் அதிகரித்த பயன்பாட்டினால் வீதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவசர தேவைகளின் பொருட்டு பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொது மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தங்கள் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த அதிகாரிகள், பொலீஸ் உள்ளிட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களது கோரிக்கைக்கு அமைய கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் அவர்கள் இராணுவத்தினருடன் இணைந்து குறித்த பிரதேசத்தினை நேரில் சென்று பார்வையிட்டதோடு மணல் அகழ்வு குறித்து துரித சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.