கொவிட் காலத்தில் விலக்கப்பட்ட இமாம்களையும் முஅஸ்ஸின்மார்களையும் மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த நிருவாகிகள் அன்பாகக் கேட்கப்படுவதாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் இன்று (12) தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்
“பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் வரையில் அத்தகைய பள்ளிகளில் புதிதாக எவரும் இமாமாகவோ முஅஸ்ஸனாகவோ சேர்ந்து கொள்ள வேண்டாம்.
அதேவேளை நியாயமான காரணங்களுக்காக பள்ளிவாயல்கள் தமது ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தால் வக்பு சபைக்கு அறிவிக்கவும். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என மேலும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்