உள்நாடுபிராந்தியம்
இயற்கை பசளை பயிர்ச் செய்கையை மன்னார் அரசாங்க பார்வையிட்டார்
விவசாயத் துறைக்குள் சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையினை மேற்கொள்ளும் இடம் மற்றும் இயற்கை பசளையூடாக மேற்கொள்ளும் பயிர்ச் செய்கையினையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் கடந்த வெள்ளிக்கிழமை (09) நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர், மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன்வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு, நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள், “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.