மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மோட்டார் சைகிள்கள் கையளிப்பு
ஹெபிடாட் போ கியூமானடி ஸ்ரீலங்கா அமைப்பினால் “வீடு அல்ல வாழ்விடம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைகிள்களை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெபிடாட் போ கியூமானடி ஸ்ரீலங்கா அமைப்பினால் வீடற்றவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பயன்படுத்திய ஹொண்டா ரக ஐந்து மேட்டார் சைகிள்களை அமைப்பின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜே.எஸ். ஜெயமாரனினால் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனிடம் கையளிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி, வவுனதீவு, பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் வறிய மக்களுக்கு சுமார் 8 இலட்சத்தி 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 669 வீடுகள் ஐக்கிய நாடுகளின் நிதிப்பங்களிப்பில் இவ்வமைப்பினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதன்போது ஹெபிடாட் போ கியூமானடி ஸ்ரீலங்கா அமைப்பின் மட்டக்கப்பிற்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எஸ். புஸ்பாகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.