crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை (13) அதிகாலை காட்டு யானை தாக்கியத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவர் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எழுந்து வெளியில் வந்தபோது தீடீரென வந்த காட்டுயானை ஒன்று தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 + = 29

Back to top button
error: