இலங்கையில் பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொலி காட்சிகளை இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிட்டகோட்டே மற்றும் இராஜகிரிய பகுதிகளைச்சேர்ந்த 26 வயதுடைய இருவரும், கண்டி பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும், பிலியந்தல பகுதியில் 39 வயது நபரும், கம்பாஹா பிரதேசத்தில் 31 வயதுடைய நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.