crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை மற்றும் சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடல்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் கதீப் உடன் கலந்துரையாடினார்.

Zoom தொழில்நுட்பம் மூலம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சுற்றுலாத் துறையினை மீளக்கட்டியெழுப்புவதற்கு இணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது குறித்த கலந்துரையாடலில் இரு நாட்டு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.

இதன் போது சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

அதற்கு பதிலளித்த சவூதி அமைச்சர் தமது நாடு என்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் 2022 இல் உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 46 = 53

Back to top button
error: