crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 புகையிரத சேவைகள்

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 புகையிரத சேவைகள் இன்று (14) முதல் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, றம்புக்கணை, மஹவ, சிலாபம், வரையில் புகையிரத சேவைகள் இடம்பெறும் என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புகையிரத திணைக்களம்

மருதானையில் இருந்து பெலியத்த மற்றும் காலி வரையில் புகையிரத சேவை இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று தொடக்கம் பிரதான புகையிரத பாதையில் 42 புகையிரத சேவைகளும், வடக்கு புகையிரத பாதையில் 2 புகையிரத சேவைகளும், கரையோரப் பாதையில் 44புகையிரத சேவைகளும் இடம்பெறவுள்ளன.

புத்தளம் பாதையில் 14 புகையிரத சேவைகளும், களனிவெளி புகையிரத பாதையில் 10 புகையிரத சேவைகளும் இடம்பெறவுள்ளன. நாளாந்தம் 112 புகையிரத சேவைகள் இடம்பெறும் என்றும் புகையிரத திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 64 = 74

Back to top button
error: