இலங்கை, ரஷ்யா விளையாட்டுத்துறை பங்களிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இரு தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கைப்பந்து, பாரம் தூக்கல், குத்துச்சண்டை, வாள் சண்டை, காற்பந்து மற்றும் ஸ்கொஷ் போன்ற விளையாட்டுத் துறைகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நிறுவனம்,
உயர்கல்வி விளையாட்டு நிறுவனம், விளையாட்டு சம்மேளனம் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற விளையாட்டு அமைப்புக்களுக்கிடையிலான நிகழ்ச்சித் திட்டங்கள், அனுபவங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.