முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சத்திர சிகிச்சை நேற்று (13) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சன் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் மகத்தான பணிக்கு மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.