உத்தேச கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டம் தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையே நேற்று (13) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இலவசக் கல்வியைப் பாதுகாப்பது தனது கட்சியின் நிலையான கொள்கை என்றும் அதைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இதன் போது எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் மற்றும் அது ஏற்படுத்தும் ஆபத்துகள் மற்றும் அது குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு ஆகியவை இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.