உள்நாடுபிராந்தியம்
வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி விடுவிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று (14) விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஜுன் மாதம் 22 ஆம் திகதி பிறைந்துறைச்சேனை 206 C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பரகத் வீதி, 2ம் குறுக்கு வீதி, அப்துல்லாஹ் வீதி ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.
குறித்த பகுதிகள் 23 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது