முகக்கவசமின்றி புகையிரதத்தில் பிரவேசிக்க முயற்சித்த இரண்டு இஞைர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (13) வாத்துவையில் இருந்து ராகமவை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று தெகிவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட இஞைர்கள் புகையிரதத்தில் பிரவேசிக்க முயற்சித்தபோது இவர்களை தடுத்த புகையிரத ஊழியர்களை தாக்கியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.