அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான வழக்கு இன்று (15) 07 ஆவது தடவையாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.