crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொவிட்19 தடுப்பூசி பெற்றுக்கொள்ள இணையத்தளம் வடிவமைக்க நடவடிக்கை

இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் இணைந்து நாட்டில் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன

இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் மக்களின் வசதிக்காக இணையத்தளமொன்றை வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எதிர்வரும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிய இணையத்தளமூடாக பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான திகதி, நேரம் மற்றும் மத்திய நிலையம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனூடாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட “தடுப்பூசி சான்றிதழை” பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெறவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − = 24

Back to top button
error: