உள்நாடுபிராந்தியம்
கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம்
கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலையம் நேற்று (15) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சிகிச்சை நிலைய திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை
திரைநீக்கம் செய்து கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டார்.
நிகழ்வில் வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர், சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர், சித்த வைத்தியத்துறை அதிகாரிகள் மற்றும் சித்த வைத்திய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.