மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை நேற்று (15) அமைச்சர் டலஸ் அழகப்பெரும வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலிபன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.