அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மொடனா கொவிட்19 எதிரான தடுப்பூசிகளின் 1.5 மில்லியன் டோஸ்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வந்தடைந்துள்ளன.
கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக இவை இன்று (16) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தின் மூலமாக இன்று கலை 09.09 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது
இந்த தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.