வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்தார்
நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வன்னி மாவட்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது.