வெளிநாடு
13 பேருடன் சென்ற ரஷ்யாவின் பயணிகள் விமானம் வானில் மாயம்
13 பேருடன் சென்ற ரஷ்யாவின் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ரஷ்ய விமானத்துறை தரப்பில்,
“ரஷ்யாவின் An-28 என்ற விமானம் 13 பயணிகளுடன் இன்று (16) வெள்ளிக்கிழமை மாயமானது. சைபீரியப் பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான விமானம் குறித்த கூடுதல் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ரஷ்யாவில் இரு வாரங்களுக்கு முன்னர் An-28 என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 28 பேர் பலியாகினர். இந்த நிலையில் மற்றுமொரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.(இந்து)