![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/06/b412.jpg)
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் புகையிரத சேவைகளை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இதனடிப்படையில், இன்று (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படும்.
இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும் புகையிரத சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை i மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்