உள்நாடுபிராந்தியம்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கு கணணி வழங்கல்
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/07/bb1-e1626540198813-780x470.jpg)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் ஏழு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான (டப்) தொடு கணணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி.க. அகிலா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் மட்டககளப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.