கண்டி – அக்குறணை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசிகள் நாளை ஜூலை 19ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை ஒன்பது தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் ஊடாக வழங்கப்பட இருக்கின்றன.
கண்டி மாவட்டத்தின் அக்குறணை கோவிட் கமிட்டியின் கூட்டம் நேற்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி எ.எச்.எம்.ஐ.கெ. அபேசிங்க, கிராம சேவகர்கள், அரச அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி , அலவதுகொட பொலிஸ் அதிகாரிகள் பங்குபற்றலுடன் நடைபெற்றபோதே இத்திர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இந்த செயல் திட்டத்தினை மேற்கொள்வதற்காக வேண்டி அக்குறணை பிரதேச சபையினால் சுமார் 35 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.