அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் இன்று (20) தோற்கடிக்கப்பட்டது.
இரு நாட்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட விவாதத்தின் இறுதியில் இன்று பிற்பகல் 5.45 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இதற்கு எதிராக 151 வாக்குகளும் அளிக்கப்பட்டன.